மாவட்டத்தில்196 பள்ளியில் பயோமெட்ரிக்; சி.இ.ஓ., தகவல் (பள்ளி துவங்கும் போதும், முடியும்போது விரல்ரேகை வைக்க வேண்டும். ) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாவட்டத்தில்196 பள்ளியில் பயோமெட்ரிக்; சி.இ.ஓ., தகவல் (பள்ளி துவங்கும் போதும், முடியும்போது விரல்ரேகை வைக்க வேண்டும். )

'சிவகங்கை மாவட்டத்தில் 196 பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படுகின்றன,'' என முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.அவர் கூறியதாவது: முதற்கட்டமாக அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரி க் கருவிகள் பொருத்தப்படுகின்றன. 







சிவகங்கை மாவட்டத்தில் 196 பள்ளிகளுக்கு தலா 2 கருவிகள் வழங்கப்பட்டன. இக்கருவிகள் பொருத்தப்பட்டு, கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்படும். தொடர்ந்து பயனீட்டாளர் குறியீடு, ரகசிய எண் ஆகிய எண் வழங்கியதும் செயல்பட துவங்கும். 195 பள்ளிகளுக்கு கணினி வசதி ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு பள்ளிக்கு மட்டும் இல்லை என, தெரிவித்தனர். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.பள்ளி துவங்கும் போதும், முடியும்போது விரல்ரேகை வைக்க வேண்டும். 








இதேபோல் சி.இ.ஓ., அலுவலகம், 3 மாவட்டக் கல்வி அலுவலகங்கள், 12 வட்டாரக் கல்வி அலுவலகங்கள், 12 வட்டார வளமைய அலுவலகங்களில் தலா ஒரு கருவி பொருத்தப்படுகிறது. இக்கருவிகள் பொருத்தியபின், குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும்.நடுநிலைப்பள்ளி வளாகத்துடன் இயங்கும் 69 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்குகின்றன. இம்மையங்களில் உபரியாக இருந்த 31 பெண் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 




மீத 38 மையங்களுக்கு 10 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டன, என்றார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment