பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதியின்மை, வேலைவாய்ப்பு இல்லாமை போன்ற காரணங்களால், வரும் 2020ம் ஆண்டு முதல் புதிய இன்ஜினியரிங் கல்லூரி துவங்குவதற்கு தடை விதிக்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் தற்போது 13 ஆயிரத்துக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளும் தமிழகத்தில் மட்டும் 550க்கும் ேமற்பட்ட பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக தங்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம்.
அனைத்து பொறியியல் கல்லூரிகளையும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (All India Council for Technical Education - AICTE) ஒருங்கிணைத்து, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டுமானக்கலை, நகரமைப்பு, விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பம், பயன்பாட்டுக் கலை மற்றும் தொழில், கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்த தொழிற்கல்விப் பாடங்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்பாக ஏஐசிடிஇ இயங்கிவருகிறது.
பொறியியல் கல்வியைத் திட்டமிடல், தரத்தை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், தரத்தை நிர்ணயித்தல், நிதியுதவி அளித்தல், கண்காணித்தல் மற்றும் சரிபார்த்தல் போன்ற பல பணிகளை செய்து வருகிறது. மேலும், தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சி மற்றும் மேலாண்மையை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட புதிய கல்லூரிகள், அவற்றின் முழு விவரங்கள் ஆகியவற்றை ஏஐசிடிஇ கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், புதியதாக பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக ஏஐசிடிஇ அமைத்துள்ள குழு, சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதன்படி, வரும் 2020ம் ஆண்டுக்கு மேல் புதியதாக பொறியியல் கல்லூரி துவங்க அனுமதிக்க கூடாது. புதியதாக இளங்கலை படிப்பில் செயற்கை நுண்ணறிவு, பிளாக்ஹைன், ரோபாட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், விஞ்ஞான அறிவியல், சைபர் பாதுகாப்பு, டிசைன் மற்றும் ஸ்டைல் ேபான்ற பாடப்பிரவுகளை துவங்க வேண்டும். பாரம்பரிய பொறியியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 'சீட்' ஒதுக்கீடு செய்யக் கூடாது. குறிப்பாக மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பாடபிரிவுகளுக்கு அனுமதி கூடாது போன்ற பரிந்துரைகளை செய்துள்ளது.
இதனால், 2020ம் ஆண்டுக்கு பின் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை தடை செய்ய வாய்ப்புள்ளது. மேலும் இதற்கு முக்கிய காரணமாக, கடந்த 2016 - 17ம் ஆண்டின் கணக்கெடுப்புபடி, 3,291 பொறியியல் கல்லூரிகளில், 51 சதவீத இடங்கள் அதாவது 15 லட்சம் மாணவருக்கான இடங்கள் காலியாக இருந்தன.
கல்லூரி நிர்வாகத்தின் ஊழல், மோசமான கட்டமைப்பு, தரமற்ற மற்றும் தகுதியில்லாத ஆசிரியர்கள், மோசமான லேப் வசதி, மாணவர்களுக்கான அடிப்படை தேவைகள் செய்துதராமை போன்ற புகார்கள் பெரும்பாலான கல்லூரிகளில் உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி, படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், 'வரும் 2020ம் ஆண்டு முதல் புதியதாக பொறியியல் கல்லூரி துவங்குவதற்கான அனுமதி இருக்காது. அதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஏற்கனவே புதிய கல்லூரி துவங்குவதற்காக அனுமதி ேகாரியவர்களுக்கு, விதிமுறைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்' என்றனர்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment