ஜன.2: தமிழகத்தில் வரும் பிப்.23 ம் தேதி டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மெயின் தேர்வும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் தட்டச்சுத் தேர்வும் நடைபெறுகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சிக்கான தேதியை மாற்ற வேண்டும் தமிழ்நாடு தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து கணினி பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் சோம.சங்கர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்பக் கல்வி கழகம் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளை நடத்தும்.
இதன் மூலம் மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதியை மேம்படுத்துகின்றனர். இந்நிலையில் தட்டச்சுத் தேர்வு நடைபெறும் நாளன்று டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2 மெயின் தேர்வும் நடைபெறுகிறது. எனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள தேர்வு ேததி மாற்றம் செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மற்ற துறைகளுடன் கலந்து ஆலோசித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment