தமிழக காவல்துறையின் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழக காவல்துறையின் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போதும், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது ஆகியவை வழங்கப்படுகின்றன. 



இந்தாண்டு இந்த இரு விருதுகளுக்கும் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திருச்சி சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.கோவிந்தசாமி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படை காவல் ஆய்வாளர் இ.சொரிமுத்து ஆகியோர் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 





இதேபோல சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையர் ச.மகேஸ்வரி, ராமநாதபுரம் சரக டிஐஜி ந.காமினி, ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் காவல் கண்காணிப்பாளர் சு.சாந்தி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.எம்.அசோக்குமார், 





சென்னை குற்றப்புலனாய்வுத்துறை சிறப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ராஜேந்திரன், சென்னை குற்ற புலனாய்வுத்துறை பாதுகாப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கேசவன், சென்னை பல்லாவரம் உதவி காவல் ஆணையர் தேவராஜ், மதுரை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.வெற்றிச்செழியன், சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கே.கனகராஜ் ஜோசப், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சங்கர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது கிடைத்துள்ளது. 




மேலும், ஆவடி வீராபுரம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மூன்றாம் அணி உதவி தளவாய் எம்.ஆறுமுகம், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கே.சங்கரசுப்பிரமணியன்,திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.ஜான்விக்டர், காஞ்சிபுரம் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் வி.கணேசன், சென்னை குற்றப்புலனாய்வுத்துறை சிறப்புப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஆர்.ஜனார்த்தனன், சென்னை குற்றப்புலனாய்வுத்துறை சிறப்புப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜே.உலகநாதன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பி.முத்துராமலிங்கம், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஐ.சீனிவாசன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையிட சிறப்பு உதவி ஆய்வாளர் எச்.குணாளன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கே.புருஷோத்தமன், சென்னை குற்றப் புலனாய்வுத்துறை சிறப்புப் பிரிவு தலைமை காவலர் என்.பாஸ்கரன் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது கிடைத்துள்ளது. 




தில்லியில் விரைவில் நடைபெற உள்ள விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படும்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment