‘இந்து தமிழ்’, எஸ்ஆர்எம் கல்வி குழுமம் சார்பில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சி  பிடித்தமான படிப்பை தேர்வு செய்து படித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் அறிவுரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

‘இந்து தமிழ்’, எஸ்ஆர்எம் கல்வி குழுமம் சார்பில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சி  பிடித்தமான படிப்பை தேர்வு செய்து படித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் அறிவுரை

பிளஸ் 2 மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான படிப்பை தேர்வுசெய்து படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று ‘இந்து தமிழ்’ நாளிதழும், எஸ்ஆர்எம் கல்வி குழுமமும் இணைந்து சென்னையில் நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி த.உதயச்சந்திரன் கூறினார். 





 ‘இந்து தமிழ்’ நாளிதழ், எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் சார்பில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை அண்ணா நகர் எஸ்பிஓஏ மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையரும், பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் செயலருமான த.உதயச்சந்திரன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்வில் மதிப்பெண் முக்கியம்தான். ஆனால், அது மட்டுமே வாழ்க்கை அல்ல. அதிக மதிப்பெண் எடுக்காத பலர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர். 





மதிப்பெண் என்பது மாணவர்களின் நிலையை அறிவியல்பூர்வமாக அளவிடும் ஓர் அளவுகோல் மட்டுமே. நான் எஸ்எஸ் எல்சி தேர்வில் கணிதத்தில் 100-க்கு 100 வாங்கினேன். ஆனால், பிளஸ் 2-வில் கணிதத்தில் என்னால் 200-க்கு 200 மதிப் பெண் எடுக்க முடியவில்லை. 4 மதிப் பெண் குறைந்ததை என்னால் ஏற்று க்கொள்ள முடியவில்லை. பிளஸ் 2-வில் கணிதத்தில் சென்டம் பெற முடியாத நான் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 38-வது ரேங்க் பெற்று தேர்வானேன். அதனால்தான் சொல்கிறேன். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. இன்றைய கல்விச்சூழலில் பள்ளியில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. புதிய பிளஸ் 1 பாடப்புத் தகத்தை நன்கு படித்தால் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் சிறப் பாக வெற்றிபெற முடியும். 




முதல் முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் அடுத்து என்ன படிக்கலாம், என்னென்ன படிப்புகள் எங்கெங்கு வழங்கப்படுகின்றன என்பது போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மருத் துவம், பொறியியல் படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அதை தாண்டி எத்தனையோ நிறைய படிப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான படிப்புகளை தேர்வுசெய்து படித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். இவ்வாறு உதயச்சந்திரன் கூறினார். கல்லூரி தேர்வில் கவனம் தேவை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக டீன் துரைவேலு பேசும்போது, “பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்கள் கல்லூரியை தேர்வுசெய்வதில் கவனமாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை, தரமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதி, கல்விக்கட்டணம் ஆகியவற்றை ஆய்வுசெய்து கல்லூரியை தேர்வுசெய்ய வேண்டும். 



எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் பேர் வளாக நேர்முகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். கூகுள், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் அவர் களுக்கு வேலை கிடைக்கிறது. மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துறைகளான செயற்கை நுண் ணறிவு, இயந்திர கற்றல், டேட்டா அன லிட்டிக்ஸ், ரொபாட் டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற பாடப்பிரிவுகளில் பிடெக் படிப்புகள் வழங்கப்படுகின்றன" என்றார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கல்வி ஆலோசகர் வெங்கடநாராயணன், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும், அதில் எந்த முறையில் கேள்விகள் கேட்பார்கள் என்பது குறித்து எடுத்துரைத்தார். 



கல்வியாளரும், வித்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநருமான எஸ்.பி.சுப்ரமணியன் மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் ஊக்கவுரை ஆற்றினார். இதைத்தொடர்ந்து, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெறுவதற்கான உத்திகளையும், ஆலோசனைகளையும் அந்தந்த பாடங்களின் நிபுணர்கள் எடுத்துரைத்தனர். ‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற எழும்பூர் மேரி கிளப் வாலா ஜாதவ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியை எம்.செல்வி கூறும்போது, “இந்த வழிகாட்டி நிகழ்ச்சி மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரைகள்கணித ஆசிரியர் ஆர்.மணிமாறன்: புதிய தேர்வுமுறையில் பயன்பாடு சார்ந்த கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். 




எனவே, பயன்பாடு சார்ந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். சிந்தனைத்திறனை தூண்டும் கேள்வி என்றாலும் பாடப்பகுதியில் இருந்துதான் கேட்பார்கள். மொத்த மதிப்பெண்ணில் 54 சதவீதம் கால்குலஸ் பாடப்பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மனதில் வைத்து அப்பகுதியை நன்கு படிக்க வேண்டும். இயற்பியல் ஆசிரியர் ஏ.திருமாறன்: அதிக கவனம் தேவைப்படுவதால் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தொடக்கத்திலேயே விடையளித்துவிட வேண்டும். விரைவாக எழுத வேண்டும். வினாக்கள் அனைத்து பகுதியில் இருந்தும் கேட்கப்படும். எனவே, எந்த பகுதியையும் விட்டுவிடாமல் அனைத்துப் பகுதிகளையும் படிக்க வேண்டும். வேதியியல் ஆசிரியர் ஏ.பரீத் அஸ்லாம்: அனைத்து பாடப்பகுதிகளையும் படித்தால்தான் ஒரு மதிப்பெண் கேள்வியில் முழு மதிப்பெண் பெற முடியும். இப்பகுதியில் மாணவர்கள் பாடத்தை எந்த அளவுக்கு புரிந்து வைத்துள்ளனர் என்பதை அறியும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். 




பாடப்பகுதியை படிக்கும்போது தாங்களாகவே கேள்விகளை உருவாக்கிக்கொண்டு விடை காண வேண்டும். உயிரியல் ஆசிரியர் வி.இளங்கோவன்: 20 சதவீத கேள்விகள் உயர்சிந்தனை கேள்விகளாக இருக்கும். பெரிய பாடப்பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பார்கள். எனவே, அந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விலங்கியலில் படம் வரைவது தொடர்பான கேள்விகள் இடம்பெறும்.மருத்துவம், பொறியியல் படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அதை தாண்டி எத்தனையோ நிறைய படிப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான படிப்புகளை தேர்வுசெய்து படித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment