மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் ஃப்ரீ, ஃப்ரீ.. செங்கோட்டையன் ஸ்வீட் தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் ஃப்ரீ, ஃப்ரீ.. செங்கோட்டையன் ஸ்வீட் தகவல்

ஆசிரியர்களின் போராட்டம் தவறாக ஒரு சிலரால் தூண்டிவிடப்படுகிறது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரிய சங்கங்களுடம் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


 சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிய பின் மாணவ,மாணவியரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மதிப்பெண் கூடுதல் மார்க் பின்னர், மேடையில் பேசிய அவர் கூறியதாவது: 





எதிர்கால நீர்த் தேவையை கருத்தில் கொண்டு மாணவர்கள் மரங்களை நடவேண்டும். மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. தூண்டப்படுகிறது தவறான தகவல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது:




அரசுப்பள்ளிகளை மூட இருப்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினரிடம் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆசிரியர்களின் போராட்டம் ஒரு சிலரால் தவறாக தூண்டிவிடப்படுகிறது. 250 நடுநிலைப்பள்ளிகள் , உயர்நிலைப்பள்ளிகளாகவும், 200 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பணிகள் பணிக்கு வாங்க 30 தொடக்கப்பள்ளிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை மூட இருப்பதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி ஆசிரியர்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். தவறான தகவல்களை கூறி ஆசிரியர்களை தூண்டி விடுபவர்கள் இத்தகைய செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிகளை மூடும் எண்ணம் அரசிற்கு இல்லை.




இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களுக்கு விளக்க அரசு தயாராக உள்ளது. ஏழை,எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும், இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார். நாங்க தயார் பேச்சுவார்த்தைக்கு ரெடி குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற நிருபர்களின் கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள், என்று பதிலளித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.




போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment