தொலைநிலைக் கல்வி: 5 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொலைநிலைக் கல்வி: 5 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி!

தமிழகத்திலுள்ள 5 பல்கலைக் கழகங்களுக்கு தொலை நிலை படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியக்குழு வழங்கியுள்ளது. இது தொடர்பான விவரங்கள் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 




 ஆண்டு தோறும் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தொலை நிலை படிப்புக்களை வழங்குவதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியக்குழு வழங்கி வருகிறது. நிகழாண்டிலும் அதற்கான அனுமதியை யுஜிசி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 81 பல்கலைக்கழகங்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போல், தமிழகத்திலுள்ள 5 பல்கலைக்கழகங்களுக்கும் தொலை நிலை படிப்புகளை வழங்கி யுஜிசி அனுமதி அளித்துள்ளது. 





 சென்னைப் பல்கலைக்கழகம் 30 தொலைநிலைப் படிப்புகளையும்(2022-23 வரை), அண்ணா பல்கலைக்கழகம் 3 தொலைநிலைப் படிப்புகளையும்(2022-23 வரை), தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 82 படிப்புகளையும்(2022-23 வரை) , தமிழ்ப் பல்கலைக்கழகம் 15 படிப்புகளையும்(2019-2020 வரை), எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 5 படிப்புகளையும்(2022-23 வரை) வழங்கத் தகுதி பெற்றிருப்பதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment