தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவு

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.





அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜெ.ஜெ.நகர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, தானியங்கி வருகை பதிவேடு துவக்க விழா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வகம் திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் விமானத்தில் பறக்கும் அளவிற்கு அரசு மாணவர்களின் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட தமிழக மாணவ மாணவிகள்தான் அதிக ஈர்ப்பு தன்மையுடன் கல்வியை கற்பதாக அங்குள்ள பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள். 





வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் 1 முதல் 5-ம்வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் வண்ண வண்ன நிறத்தில் சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.9 முதல் 12-ம்வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு இண்டெர் நெட் வசதி செய்து தரப்படும். 8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு பசியை போக்க மினி மடிக்கணினி வழங்கப்படும், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். வரும் காலங்களில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் 12-ம் வகுப்பில் 'ஸ்கில் டிரெய்னிங்' எனும் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டு பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமையை கல்வி துறை செய்துவருகிறது.இன்று ஜி.எஸ்.டி.எனும் வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 135 மக்களில் 25 சதவிதம் பேர் வரி கட்டி வருகிறார்கள். அவர்களுக்கு ஆடிட்டர் எனும் பட்டயகணக்கர் 10 லட்சம் பேர் தேவை. 






ஆனால் 2.85 லட்சம் பேர்தான் ஆடிட்டர் என்னும் பட்டயகணக்கர் உள்ளனர். எனவே தமிழக அரசு சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் 5000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சார்ட்டட் அக்கவுண்ட் எனும் சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறார்கள்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் முதற்கட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்பேசினார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment