குறைதீர் கற்பித்தலுக்கான முன்னறி தேர்வு, ஜன., 4ம் தேதி நடக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,399 தொடக்கம், 471 நடுநிலை, 320 உயர்நிலை, 407 மேல்நிலை என, 2,597 பள்ளிகள் உள்ளன.இதில், 9ம் வகுப்பு பயிலும், ஆங்கில பாடத்தில், பின் தங்கி இருக்கும் மாணவர்களை கண்டறிவதற்கு, முன்னறி தேர்வு நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜன., 4ம் தேதி நடைபெறும் இத்தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியில், 14 ஆயிரத்து 487 மாணவர்கள் உள்ளனர். ஆங்கில வழியில், 7,813 மாணவர்கள், தேர்வு எழுத உள்ளனர்.கடந்த ஆண்டு, 19 ஆயிரம் மாணவர்கள், முன்னறி தேர்வு எழுதினர் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment