97 வயது கேரள மாணவி காமன்வெல்த் கற்றல் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில், எழுத, படிக்க தெரியாத முதியோருக்கு எழுத்தறிவு அளிப்பதற்காக, மாநில எழுத்தறிவு இயக்கத்தின், 'அக் ஷராலக் ஷம்' திட்டம் துவங்கப் பட்டது.இந்த திட்டப்படி, ஐந்து நிலைகளில் முதியோருக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் சேரும் முதியோருக்கு, தாய்மொழியில் எழுத, படிக்கவும், அடிப்படை கணிதமும் கற்றுத் தரப்படுகின்றன.சமீபத்தில், மாநில அரசு நடத்திய தேர்வை, 43 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில், 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.நான்காம் நிலை தேர்வில், கார்த்தியாயினியம்மா, 96, என்ற பாட்டி, 98 சதவீத மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தார். இதனையடுத்து காமன்வெல்த் அமைப்பால் கவுரவிக்கப்பட்டார்.
இந்நிலையில் காமன்வெல்த் நாடுகளில் கல்வி முன்னேற்றத்திற்காக செயல்படும் கனடாவை சேர்ந்த கல்விக்கான காமன்வெல்த் அமைப்பானது, ஆழப்புழா பகுதி கற்றல் நல்லெண்ண தூதராக கார்த்தியாயினியம்மாவை நியமனம் செய்துள்ளது. இதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் துணை தலைவர் பாலசுப்ரமணியத்திடம் இருந்து பெற்று கொண்டார்.இது குறித்து கார்த்தியாயினியம்மா கூறியதாவது: எனது குழந்தைகள் எனக்கு கற்பிக்க விரும்பினால் நான் இன்னும் கற்றுகொள்ள விரும்புகிறேன். தான் ஓய்வு நேரத்தில் கம்ப்யூட்டர் கற்று கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.
தற்போது ஆழப்புழாவில் தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அப்பகுதியில் உள்ள கோயில் துப்புரவுபணி செய்து வருகிறார்.மேலும் அவர் 4 -ம் வகுப்பிற்கு இணையான கல்வி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment