பணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மணி வரை அவகாசம்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மணி வரை அவகாசம்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு

பணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மணி வரை அவகாசம்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 




இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:- 




ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் கடந்த 22-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவுகள் ஏதும் பெறாத நிலையில், பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்- அப் மூலம்... 





அவ்வாறு வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதற்கு விரும்பும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும். நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.), வாட்ஸ்-அப் மூலமாகவோ தகவல் தெரிவித்து விட்டு உடனடியாக தங்கள் பணியிடத்தில் சேர்ந்து பணியைத் தொடரலாம். 




 இந்தத் தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்: 





அவ்வாறு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆசிரியர்கள் பணியில் சேரவில்லையெனில், அந்தப் பணியிடங்கள் ஏற்கெனவே அறிவித்தவாறு காலிப் பணியிடமாக அறிவிக்கப்பட்டு அந்தப் பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment