இனிமே ஸ்கூலில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது… ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இனிமே ஸ்கூலில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது… ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறை ரத்து செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 




 2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அந்த கல்வி உரிமை சட்டமானது இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கட்டாயத் தேர்ச்சி என்ற திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தோல்வியடைய வைக்காமல் அடுத்தடுத்து வகுப்புக்கு தேர்ச்சியடைய செய்ய வேண்டும். 





அதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையிலான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. சட்ட திருத்த மசோதா மசோதா தாக்கல் அதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக, அந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. 



 அவைகளில் ஒப்புதல் இரு அவைகளிலும் ஒப்புதல் இரு அவைகளின் ஒப்புதலையும் இந்த மசோதா பெற்று விட்டது. அவையில் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசினார். 2 மாதங்களில் மறு தேர்வு மறு தேர்வு நடத்த வேண்டும் அப்போது அவர் கூறுகையில், 5 மற்றும் 8ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்த வேண்டும். 






அதிலும் தோல்வியடைந்தால் அவர்களை அதே வகுப்பில் மீண்டும் பயிலச் செய்ய வேண்டும் அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள கட்டாய தேர்ச்சி திட்டத்தையே ரத்து செய்துவிடலாம். மாணவர்களுக்கு கல்வி கல்வி கற்கும் மாணவர்கள் இதில் எந்த முடிவானாலும் உறுப்பினர்களே முடிவு செய்யட்டும். கட்டாயத் தேர்ச்சி என்ற திட்டத்தால் மாணவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கல்வியான ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment