ஆசிரியர்கள் வேலைநிறுத்த நாட்களில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக தொடக்க கல்வி இயக்குநர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில்
இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. விடுப்பு அனுமதி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் விடுப்பு அனுமதி பெறாமல் பணிக்குவராத ஆசிரியர் விபரங்களை அரசு பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் என தனித்தனி படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் தினமும் காலை 10.30 மணிக்குள் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அனுப்பி வைக்க வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து பள்ளிகள் தங்குதடையின்றி செயல்பட நடவடிக்கை கோருவதுடன் காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத நிலையில் அப்பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை பயன்படுத்தி பள்ளிகள் செயல்படுதை உறுதிப்படுத்திட வேண்டும்.
கல்வித்துறையை சேர்ந்த வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை கொண்டு அனைத்து பள்ளிகளும் தங்குதடையின்றி செயல்பட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் உரிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். 22ம் தேதி முதல் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு 'நோ ஒர்க் நோ பே' என்ற முறையில் ஊதியத்தை பிடித்தம் செய்யவும், பிடித்தம் செய்யப்பட்ட விபரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் உரிய பதிவுகள் செய்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment