நீங்கள் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பவரா.? உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா.? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீங்கள் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பவரா.? உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா.?





மனிதனுடைய வாழ்வில் தண்ணீர் ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. உணவை விட நீர் மிக முக்கியமான ஒன்று. மனித உடல் 70 முதல் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால், இந்த நீர்ச்சத்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது.
உடல் வறட்சி :


நம் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள்.தாகம் எடுப்பது, நாக்கு வறண்டுபோவது, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, அதிகளவு சிறுநீர் கழிப்பது, தலை சுற்றுவது, தலைவலி ஏற்படுவது, வியர்ப்பது, குழப்பான மனநிலை போன்றவை உடல்வறட்சி ஏற்பட்டுள்ளதற்கான மிக முக்கியமான அறிகுறிகள்.



உடல் நலக்குறைவு :
உடலில் ஏற்படும் சில நோய்களும் நீர்ச்சத்து குறைவதற்கான காரணியாக இருக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தி, தீக்காயங்கள், உடல் சூடு, காய்ச்சல், அதிக வியர்வை, சர்க்கரை நோய் பாதிப்பு, போதிய அளவு நீர் அருந்தாமை போன்றவைதான் இதற்கான காரணங்களாக இருக்கும்.



இதனை கவனிக்காமல் விட்டால், நீர்ச்சத்து குறைபாடு முதிர்ச்சி நிலையை அடையும். இது, சிறுநீரக செயலிழப்பு, உணர்விழந்த முழு மயக்க நிலை, அதிர்ச்சி நிலை, அதீத காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து அளவு குறைவதாக உணர்கிறவர்கள், சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அருந்த வேண்டும். எலக்ட்ரால் அல்லது ஜூஸ் வகைகளையும் அருந்தலாம். உடல் வறட்சி என்பது இயல்பாக ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றுதான் என்றாலும்கூட, கவனிக்கப்படாத பட்சத்தில், அது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முன்னெச்சரிக்கையோடு செயல்படுதல் நல்லது.



🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment