தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருவதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் நிச்சயமாக கொடியேற்று நிகழ்ச்சியினை தலைமையாசிரியர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்றும் அதில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் எனவும் தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தாத பள்ளிகள் மீதும், கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சிக்கலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அதில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்திடவும், தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு பள்ளிகள் தங்குதடையின்றி செயல்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment