இனி கவலையே இல்லை.. ஊருக்கு போக என்ன ரயில்? வாட்ஸ் அப்பிலே அப்டேட்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இனி கவலையே இல்லை.. ஊருக்கு போக என்ன ரயில்? வாட்ஸ் அப்பிலே அப்டேட்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மெஸேஜிங் தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். 20 கோடி பேருக்கு மேல் தினம் தினம் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி பல அசத்தல் அப்டேட்டுகளை அள்ளிவிடும் வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது இந்திய மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையிலான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.




ரயில் மூலம் பயணம் செய்பவர்கள், இனி தங்களுக்கான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் குறிப்பிட்ட ரயில் குறித்தான பிற தகவல்களை வாட்ஸ்அப் மூலமே அறிய முடியும்.




இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி, மேக் மை ட்ரிப் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தான் வாட்ஸ்அப் மூலம் ரயில் சேவை குறித்தான தகவல்களை பெற முடியும்.


பிஎன்ஆர் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்வதற்கான வழிகள்:



1.உங்கள் மொபைலில் உள்ள கான்டேக்ட்ஸில் மேக் மை ட்ரிப் தளத்தின் வாட்ஸ்அப் எண்-ஐ சேமித்துக் கொள்ளவும்.


2.இதையடுத்து, வாட்ஸ்அப்-க்குச் சென்று, மேக் மை ட்ரிப் எண்ணுடன் மெஸேஜ் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.


3.பிஎன்ஆர் (PNR) என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு உங்களது பிஎன்ஆர் எண்ணை தட்டுங்கள். பிறகு மெஸேஜ் அனுப்புங்கள்.
இதையடுத்து, உங்களது பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தானாகவே தெரியபடுத்தப்படும்.



ரயில் சேவை குறித்தான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வழிகள்:



1.முன்னர் போலவே, மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் எண் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் சாட்டுக்கு சென்று ரயில் எண்ணை மட்டும் தட்டி அனுப்புங்கள். சிறிது நேரத்தில் எப்போது ரயில் கிளம்பியது, எப்போது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அது வந்து சேரும், எப்போது உங்களை இலக்கை அடைவீர்கள் உள்ளிட்டத் தகவல்கள் தெரியபடுத்தப்படும்.


சில நேரங்களில் பதில் வர தாமதமாகலாம். ஆனால், அது சாதரணமானது தான். இந்த வசதியை பயன்படுத்துவதற்கு முன்னர் வாட்ஸ்அப் செயலியின் கடைசி அப்டேட்டை தரவிறக்கம் செய்துவிட்டதை உறுதி செய்து கொள்ளுங்கள். 




இந்த அனைத்து சேவையையும் வாட்ஸ்அப் இலவசமாகவே தனது பயனர்களுக்குக் கொடுக்கிறது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment