அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு

ஹூஸ்டன்: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த கே.பி.ஜார்ஜ் நீதிபதியாக பதவியேற்றார். கேரள மாநிலம், காக்கோடு பகுதியை சேர்ந்தவர் கே.பி.ஜார்ஜ். இவரது தந்தை லாரி ஓட்டுனர். ஜார்ஜுக்கு 15 வயதானபோது அவரது குடும்பம் நகரத்துக்கு இடம் பெயர்ந்தது. 






அங்கு சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்த பின்னர் அவருக்கு மும்பையில் வேலை கிடைத்தது. பின்னர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வேலை கிடைத்தது. 1993ம் ஆண்டு அங்கு சென்றார். அதன் பின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் பென்ட் மாவட்டத்துக்கு சென்ற அவர், அங்கு தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 






இவர் அங்குள்ள பிரபலமான ‘இன்டிபென்டன்ட் பள்ளி’யின் மாவட்ட அறங்காவலராக உள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், கடந்த நவம்பரில் போர்ட் பென்ட் மாவட்டத்துக்கு நடந்த நீதிபதி தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த ராபர்ட் ஹெபர்ட்டை தோற்கடித்தார். இதையடுத்து, புதிய பதவியை ஜார்ஜ் நேற்று ஏற்றுக் கொண்டார். துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment