இனி கவலையே இல்லை...பான் கார்டு தொலைந்தால் ஈஸியாக எப்படி வாங்கலாம் தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இனி கவலையே இல்லை...பான் கார்டு தொலைந்தால் ஈஸியாக எப்படி வாங்கலாம் தெரியுமா?

நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட பான் கார்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள். 



 பொதுவாகவே அடையாள ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்து புகார் அளிப்பது சிறந்தது


பான் கார்ட் தொலைந்துவிட்டால் டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். 


 விண்ணப்பிப்பது எப்படி? 


 டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல் (NSDL) / யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித்துறையின் அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம். இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். 



 என்எஸ்டிஎல் (NSDL) லிங்க்: //www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html யூடிஐஐடிஎஸ்ல் (UTIITSL) லிங்க்: //www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இந்த இணையதளத்திற்குள் நுழைந்து டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களது பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையை பதிவு செய்ய வேண்டும். இந்த முறையில் விண்ணப்பத்தால் பான் கார்ட்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு கடவுச்சொல் வரும். அதனை உள்ளிட்டு விண்ணப்பத்தை சரிபார்த்துப் பூர்த்தி செய்யவும். 




இதோடு, உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும். பேப்பர் அப்ளிக்கேஷன்: இதில், விண்ணப்பத்தின் அடிப்படை விவரங்களை பதிவிட்டு, அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றை தேர்வு செய்து அவற்றினை பதிவேற்ற வேண்டும். தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.



🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂



No comments:

Post a Comment

Please Comment