l கடலூர் மாவட்டம் கொஞ்சிக் குப்பத்தைச் சேர்ந்த மருத்துவர் மதன் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் 1200-க்கு 925 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
l மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகத் திருச்சியைச் சேர்ந்த 17 வயது மாணவி வில்லட் ஓவியா 500 கிராம் எடைகொண்ட ‘அனிதா சாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தார். காற்று மாசுபாடு, புவி வெப்பமடைதலின் தாக்கத்தை ஆராயும் இந்தச் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் உள்ள அஸ்ட்ரா ஆய்வுக் கூடத்தில் இருந்து மே 7 அன்று விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
l ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் ராமன் மகசேசே விருது 2018-ம் ஆண்டில் பாரத் வட்வானி, சோனம் வங்சுக் ஆகிய இரு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி-பொருளாதார மேம்பாட்டுக்காகக் கடந்த 30 ஆண்டுகளாகச் செயலாற்றிவரும் கல்வி சீர்திருத்த வாதி சோனம் வாங்சுக். இவருடைய வாழ்க்கையைத் தழுவியே ‘3 இடியட்ஸ்’ படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் வாழும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வைப் புனரமைக்க கடந்த 30 ஆண்டுகளாக சேவை செய்துவருபவர் மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பாரத் வட்வானி.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment