புதிய தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாது : 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி கூறுகிறார் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதிய தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாது : 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி கூறுகிறார்

''செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வருகையால், வேலைவாய்ப்பு பறிபோகாது,'' என, 'இன்போசிஸ்' நிறுவனத்தின் கவுரவ தலைவர், நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.




அவர், மேலும் கூறியதாவது:கம்ப்யூட்டர் சயன்ஸ் பிரிவில், செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமான பகுதியாகும்.அத்துடன், இயந்திரங்கள் இடையிலான இணைய பயன்பாடு, இயந்திர கல்வியியல், பெருந் தரவு ஆய்வு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள், மனிதர்களின் வாழ்க்கையை மேலும் சுலபமாக்கும்.இந்த தொழில்நுட்பங்களால், வேலைவாய்ப்பு பறிபோகாது ; மாறாக, அதிகரிக்கும்.தொழில்நுட்பங்கள், கடினமான பணியில் இருந்து, மனிதர்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படும் பிரிவை நோக்கி, சமூகத்தை அழைத்துச் செல்கிறது.உதாரணமாக, 50 ஆண்டுகளுக்கு முன், கம்ப்யூட்டர் பயன்பாடு பரவலாகத் துவங்கியபோது, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகள், உடனடியாக அத்தொழில்நுட்பத்தை தழுவின.அதனால், பிற நாடுகளை விட, இந்நாடுகளின் வேலையில்லாத திண்டாட்டம், 




தற்போது, ஒற்றை இலக்கத்தில் குறைந்து உள்ளது. 13.30 கோடி வேலைவாய்ப்புகள் 'வரும், 2022ல், கடின உழைப்பு சார்ந்த, 7.50 லட்சம் பணிகள் காணாமல் போகும். 'ஆனால், இதே காலத்தில், அலுவலகங்களில், புதிய தொழில்நுட்பங்களால், 13.30 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்' என, உலக பொருளாதார கூட்டமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.வங்கிக்கு சென்று, பணம் எடுக்கும் காலம் மறைந்து, அருகில் இருக்கும், 'ஏ.டி.எம்.,' இயந்திரத்தில், நினைத்த நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதற்கு, தொழில்நுட்பம் தான் துணை புரிந்துள்ளது.ஆகவே, 




புதிய தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பதில் உண்மையில்லை. வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதை நான் நம்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment