வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்லாந்து நாட்டு கல்வி முறையில் எந்த அம்சங்களையெல்லாம் இங்கே அமல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழுவினர் பின்லாந்து நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண் என்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2.5 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படும்.
மருத்துவ படிப்பில் 1000 பேர், அரசு பள்ளிகளில் இருந்து இடம்பெறுவர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment