புயல் மற்றும் வானிலை நிகழ்வுகளை உடனுக்குடன் அறிவிக்கும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா 4_வது இடம் வகிக்கிறது.புயல் மற்றும் வானிலை நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிடுவதில் உலக அளவில் 4 வது சிறந்த நாடாக இந்தியா உள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரையில் தேசிய கடல் வளத்துறை தொழில் நுட்பக் கழகம் சார்பில் 25 கோடி செலவில் உருவாக்கப்பட்ட செயற்கை மணற்பரப்பு மறு சீரமைப்பு திட்டத்தை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்த்துவைத்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் சுனாமி வருவதை துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment