கற்பித்தலுடன் நிர்வாக பணிகளும் நிற்கும்: இன்று களமிறங்கும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கற்பித்தலுடன் நிர்வாக பணிகளும் நிற்கும்: இன்று களமிறங்கும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்துடன் சேர்ந்து, மூன்று சங்கங்கள் இன்று முதல், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் போராட முடிவெடுத்துள்ளன.ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், கடந்த 22ம் தேதி முதல், காலவரையற்ற போராட்டம் நடக்கிறது.




 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கைது செய்து, சிலரை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிலையிலும், போராட்டம் மேலும் வலுக்க துவங்கியுள்ளது.பொதுத்தேர்வுக்கு இன்னும், 33 நாட்களே உள்ளதால், அரசு மாற்று ஏற்பாட்டில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், நாளுக்கு நாள் போராட்டம், மேலும் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக, இன்று முதல் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கமும் சேர்ந்து போராட முடிவெடுத்துள்ளது.கோவையில், இச்சங்கத்தில் 520 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அலுவலக பணிகளை விடுத்து, போராட்டத்தில் இறங்குவதால், நிர்வாக பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கமும், ஆதரவு தெரிவித்துள்ளது. தலைமையாசிரியர்களும் போராட்ட களத்துக்குள் வந்துவிட்டால், பள்ளிகளை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படும்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், 140 தலைமையாசிரியர்கள் பங்கேற்ற, மாவட்ட அளவிலான கூட்டம், கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்க தலைமையாசிரியர்களிடம், ஆதரவு குறைவாகவே உள்ளது தெரியவந்தது. விருப்பமுள்ளவர்கள் மட்டும், நாளை முதல் (இன்று) போராட்டத்தில் பங்கேற்பர்,'' என்றார்.





மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின், உயர்மட்ட குழு உறுப்பினர் ராஜசேகர் கூறுகையில், ''தமிழக அரசிடம் சாதகமான முடிவு வராதவரை, போராட்ட களத்தில் இருப்பவர்கள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். கலெக்டர் அலுவலகம் அருகில், நாளை (இன்று) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.




🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment