பள்ளி மாணவர்கள் இந்த கல்வியாண்டின் இறுதிக்கு வந்துவிட்டனர். இன்னும் ஓரிரு மாதங்களில் இறுதி தேர்வுகளை எழுதவுள்ளனர். ஆனால், இப்போதே சி.பி.எஸ்.இ அடுத்த ஆண்டுக்கான திட்டத்தில் இறங்கிவிட்டது.
செயற்கை நுண்ணறிவுவை (AI) 8,9 மற்றும்10-ம் வகுப்புகளுக்குச் சேர்க்க முடிவெடுத்துள்ளது சி.பி.எஸ்.இ. கிடைத்த தகவல்களின்படி AI ஒரு ஆப்ஷனல் படமாக இந்த வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும். இது அடுத்த கல்வியாண்டே நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகளை மனித அறிவு தேவைப்படும் வேலைகளைச் செய்யவைக்க உதவும். இந்த திறனை ஒரு கணினியிடம் கொண்டுவர 'machine learning' போன்ற விஷயங்களைக் கற்றறிவது முக்கியம். கூகிள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தைத்தான் தற்போது பெரிதும் பயன்படுத்துகின்றன.
இன்றைய தினத்தில் AI இல்லாத துறையையே பார்க்கமுடியாது.
இதைப்போன்ற நுட்பமான அறிவியலைச் சிறுவயதிலேயே மாணவர்களுக்குக் கற்றுத்தருவது அவர்களை இன்றைய டிஜிட்டல் உலகுக்கு சரியானமுறையில் தயார்படுத்தும் எனப் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். ஆனாலும் பொறியியல் கல்விக்கே சற்று சிக்கலான இந்த டாபிக்கை பள்ளிக்கல்வியில் எப்படிக் கையாளப் போகிறது சி.பி.எஸ்.இ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சி.பி.எஸ்.இ பள்ளிகள் அடுத்த கல்வியாண்டை விடுமுறை முடிந்து ஏப்ரலில் தொடங்குமென்பது குறிப்பிடத்தக்கது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment