தேனி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணைவுத் திட்ட துறை சார்பில் வழங்கப்படும் சிறந்த பெண் குழந்தைக்கான மாநில விருது பெறுவதற்கு, 18 வயதுக்கு உள்பட்ட, தகுதியுள்ள பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை சார்பில், மாநில அளவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் பெண் குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்கவும் சிறந்த பணிகள் புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைளை சிறப்பிக்கும் வகையில் மாநில அளவிலான விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் பெண் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்த விருது பெறுவதற்கு தகுதியுள்ள, 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவரிடம் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆதாரம், முன்மொழிவுகளை இணைத்து ஜன.10-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment