உலகிலேயே முதன் முதலாக செயற்கை மின்னலை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலகிலேயே முதன் முதலாக செயற்கை மின்னலை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

உலகில் முதன்முதலாக மேகமூட்டத்தினுள் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னலை விஞ்ஞனிகள் உருவாகி உள்ளனர். 



இதன் மூலம் மின்னலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அறிவியல் விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்களின் மழை நேரத்தில் மின்னல் ஏற்படும் போது பட்டம் விட்டால் நூல் வழியே மின்சாரம் பாய்வதை உணர்ந்தார். அன்றிலிருந்து மின்னலில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான காரணிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் லேசர் அலைக்கற்றையை மேக மூட்டத்தினுள் செலுத்தி செயற்கை மின்னலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 





மேகக்கூட்டம் ஒன்றையொன்று கடக்கும்போது அதி திறன் கொண்ட கொண்ட அலைக்கற்றை மேகத்தினுள் செலுத்தப்பட்டது. குறுகிய கால இடைவேளியில் லேசர் அலைக்கற்றை செலுத்தியதால் மின்னூட்டம் உருவாகி மின்னல் ஏற்படுகிறது. அறிவியலின் இந்த நிகழ்வு இயற்பியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மின்னலில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இந்த ஆய்வு ஒரு ஆதாரமாக உள்ளது என அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 





உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை விட 40 மடங்கு மின்சாரம் மினலில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment