பெங்களூரு மாணவிகளுக்கு களிமண் பொம்மை பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெங்களூரு மாணவிகளுக்கு களிமண் பொம்மை பயிற்சி

பெங்களூரு பள்ளி மாணவர்களுக்கு களிமண் பொம்மை தயாரிப்பு குறித்த பயிற்சியை, டெரக் கோட்டா கலைஞர் முனுசாமி வழங்கினார்.





பெங்களூரு டி.ஐ.எஸ்.பி., இன்டர்நேஷ்னல் பள்ளியை சேர்ந்த 120 மாணவர்கள் பாரம்பரிய கல்வி சுற்றுலாவாக புதுச்சேரிக்கு நேற்று வந்தனர்.வில்லியனுாரில் உள்ள களிமண் பொம்மைகள் தயாரிப்பு மையத்தில், களிமண் பொம்மைகள் தயாரிக்கும் முறையை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து ஒதியம்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில், மாணவர்களுக்கு களிமண் பொம்மை செய்வது குறித்த பயிற்சியை முனுசாமிஅளித்தார்.




இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, 'இப்பயிற்சி மூலம் பாரம்பரிய கலையை கற்க முடிந்தது. எங்கள் பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் களிமண் பொம்மை செய்வது குறித்து கற்றுகொடுப்போம்' என்றனர்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment