அங்கன்வாடி மையங்களில் சமூகநலத்துறை சார்பில் எல்.கே.ஜி.,மற்றும் யூ.கே.ஜி.,வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.இதற்கு, துவக்கப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை எதிர்த்து சிலர், &'துவக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களை வேறு துறைக்கு மாற்ற முடியாது. விதிகளை பின்பற்றாமல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்,&' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், &'தமிழகத்தில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை தமிழக அரசுத் தரப்பில் ஜன.,25 ல் தாக்கல் செய்ய வேண்டும்,&' என்றார்.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment