ஒரு முன்கூட்டியே-திட்டமிட்ட காலத்திற்கு, உணவை தவிர்த்து நோன்பு இருப்பது இந்திய கலாச்சாரத்தின் தனித்துவமாக உள்ளது.
வேதகாலம் முதலாக, உண்ணா விரதம் இருப்பது, ஆன்ம பலம் பெறவும், உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பே, மனித உடல் ஒரு சிக்கலான அமைப்பு என்றும், அதை அவ்வப்போது சுத்திகரிப்பதன் மூலமாக, மனதோடு மறு பிணைப்பு ஏற்படுத்த முடியும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
அதர்வண வேதப் பாடல்களில், உண்ணா நோன்பு இருப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நுட்பங்கள் பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில், இவற்றுக்கு, மத ரீதியாகவும், கலாச்சாரம் மற்றும் சமூக ரீதியாகவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த மரபுக்கு பின்னணியில் அறிவியல் உண்மை இருப்பதால்தான், தலைமுறைகள் கடந்தும் தாக்குப்பிடித்து நிற்கிறது!
ஏன் நோன்பு இருக்க வேண்டும்?
ஆயுர்வேதா எனப்படும் பழங்கால அறிவியலின்படி, ஜீரண மண்டலத்தில் நச்சுப்பொருட்கள் சேர்வதால்தான், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை சீரான இடைவெளியில் சுத்தப்படுத்தி வந்தால், நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
இதன்படி, உண்ணா விரதம் இருக்கும்போது, உடலில் உள்ள ஜீரண உறுப்புகளுக்கு, முழு ஓய்வு கிடைக்கிறது.
மேலும், உடலின் செயல்பாடு, சீராகி, சுத்தமாகவும் மாறுகிறது.
மனித உடலின், 80 சதவீதம் திரவத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, நிலவின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படுவதால், உணர்ச்சி ரீதியான கோளாறுகளும், உடலில் அமில அளவும் குறைய நேரிடுகிறது. இவற்றுக்கான மாற்று மருந்தாக, உண்ணா விரதம் பயன்படுகிறது. புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு நோய், நோய் எதிர்ப்புக் கோளாறுகள் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படுவதை, உண்ணா விரதம் தடுப்பதாக, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஏன் இறைச்சியை தொடக்கூடாது?
இதிலும் ஒரு விஞ்ஞான ரீதியான காரணம் உள்ளது. மனித உடலுக்கு தேவைப்படும் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இறைச்சியில் உள்ளன. இவற்றை கணிசமான அளவு எடுத்துக்கொள்வதால், உடலில் ஒருவித நிறைவு ஏற்படுகிறது. அதேசமயம், அதிகளவில் இறைச்சி சாப்பிடும்போது, சிறுநீரகத்தில் கற்கள், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும். எனவேதான், இறைச்சி சாப்பிடுவதை வரைமுறை செய்து, அதற்கென தனி நாட்களை இந்தியர்கள் ஒதுக்கியுள்ளனர். இதை மற்றவர்களும் ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே, குறிப்பிட்ட கடவுள்களின் பெயரால் உண்ணாவிரதம் இருக்கும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
உண்ணாவிரதம் எப்படி உதவுகிறது?
வெளிப்படையாகச் சொன்னால், தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும்போது, உடல் எடை குறைந்து, கச்சிதமான உடல் அமைப்பு ஏற்படுவதுடன், நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. உண்ணாவிரதம் இருப்பதால், மன அமைதி கிடைப்பதாக, அறிவியல் ரீதியான ஆய்வுகளும் உறுதிசெய்கின்றன.
இந்த இடத்தில் பல ஆழ்ந்த கருத்துகள் புதைந்துள்ளன. ஆனால், நாம் உண்ணாவிரதத்தை ஏதோ சடங்கு போல மேலோட்டமாக பின்பற்றுகிறோம். உண்மையில், வேத சாஸ்திரங்களில், உண்ணாவிரதத்தின் அமைப்பு முறை, நிலவின் தேய்பிறை மற்றும் வளர்பிறையின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமாக, இயற்கையின் சுழற்சிக்கும், மனித உடல் இயக்கத்திற்கும் ஒருங்கிணைப்பு ஏற்படுகிறது.
சில குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதங்களில் நாம் விரதம் இருப்பதற்கு எதுவும் காரணம் உள்ளதா?
ஸ்கந்த புராணம் என்ற வேத நூலில், வளர்பிறையின் 11வது நாளில், ஏகாதசியன்று உண்ணா விரதம் இருப்பது, உடலுக்கு தடுப்பு மருந்தாக அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, ஆடி பவுர்ணமி முதல் கார்த்திகை பவுர்ணமி வரையான காலத்தில், உடலின் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், இந்த 3 மாதங்களுக்கு, சதுர்மாஸ்ய விரதம் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கிடைக்கும் உணவு தரம் மலிவாக இருக்கும் என்பதால், உண்ணாவிரதம் இருப்பது, நல்ல ஆரோக்கிய பலன்தரும்.
நோன்பு இருப்பதன் காரணம் என்ன?
நோன்பு இருப்பதன் பின்னே உள்ள அறிவியல் ரீதியான காரணம், மனித உடலில் சேரும் நச்சுகளை அகற்றி, மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இதை நவீன விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது. நோன்பு இருக்கப் பழகுவதால், மனம் அமைதியாகி, வாழ்வின் எந்த சூழலிலும், வன்முறையில் இறங்காமல் தடுத்துவிடுகிறது. இதன் விளைவாக, மனிதன், 5 அறிவுகளின் இச்சைக்கு அடிபணியாமல், 6வது அறிவை பின்பற்றி ஞானம் பெற முடியும்
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment