தேர்தல் செயல்பாடுகளில் இளம் வாக்காளர்கள் ஈடுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நாளை தேசிய வாக்காளர் தினம் கொண்டாட, தேர்தல்ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜன.,25ம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
வரும் மே மாதம் லோக்சபா தேர்தல் நடப்பதை முன்னிட்டு, இந்தாண்டுக்கான வாக்காளர் தின விழா, அதையொட்டிய நிகழ்ச்சிகள், முக்கியத்துவம் பெறுகிறது.அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகளில் சிறப்பான விழா நடத்த, ஆணையம் அறிவுறுத்தியுள்ளது அதன்படி, மாவட்ட அளவில் மட்டுமின்றி ஓட்டுச்சாவடி அளவிலும், ஜன.,25 காலை 11:00 மணிக்கு, விழா நடத்தி பங்கேற்கும் அனைவருக்கும், வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க வேண்டும்.'
இளம் வாக்காளர் மத்தியில், தான் ஒரு வாக்காளர் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். இவ்விழா தொடர்பான படங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில், பதிவேற்றப்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் நாளை, பள்ளி, கல்லுாரி, பல்கலை, அரசு அலுவலகங்களில், தேசிய வாக்காளர் தின விழா மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்காளர் தினம் ஏன்?அரசியலில் இளைய தலைமுறையினர் ஈடுபட வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாட, 2011ல் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஜன., 25, தேசிய வாக்காளர் தினமாக அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட இந்நாளில், முதல் முறையாக ஓட்டளிக்கப் போகும் இளம் வாக்காளர்களுக்கு, போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment