அரசு பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க பிரியாணியுடன் தடபுடலான விருந்து
இளையான்குடி:இளையான்குடி அருகே அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்க, அவர்களுக்கு பிரியாணி, வடை, கேசரியுடன் தடபுடலான விருந்து வழங்கப்பட்டது.தனியார் பள்ளி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 25 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளன. இதனால் அந்த பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கவும் சத்துணவில் ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதில் நன்கொடை பெற்று மாணவர்களுக்கு தடபுடலான விருந்து வைக்கப்படுகிறது.
அதன்படி இளையான்குடி அருகே மருதங்கநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 78 மாணவர்களுக்கு பிரியாணி, வடை, கேசரியுடன் தடபுடலான விருந்து நேற்று வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
Please Comment