பிளஸ் 1, பிளஸ் 2க்கு மாதிரி வினாத்தாள் அமைப்பின்படியே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற உள்ள மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ் 1, பிளஸ் 2) பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்து பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த மாதிரி வினாத்தாள் வடிவமைப்பின்படியே பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வடிவமைப்பு தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அறியும் வண்ணம் கடிதம் மூலம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இருப்பினும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வினாத்தாள் வடிவமைப்பு குறித்து வினாக்கள் எழுப்பி வருகின்றனர். அதற்கு இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. அனைத்து குறிக்கோள் (அப்ஜெக்டிவ்) வினாக்களுக்கும் 4 மாற்று விடைகள் அளித்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதிட தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடிட்ட இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதிட வேண்டும். மாதிரி வினாத்தாளில் சில பாடங்களுக்கு பொருத்துக வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையான வினாக்களுக்கும், 4 மாற்று விடைகள் அளிக்கப்பட்டு அவற்றினுள் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரி வினாத்தாள் அமைப்பின் படியே பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே ஆசிரியர், மாணவர்கள் அந்தந்த பாடத்திற்குரிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பினை அறிந்து அவ்வாறே பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment