பிளஸ் 1 வகுப்புக்கு, 2018ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பிளஸ் 1 பாடங்களை, பல பள்ளிகள் நடத்தாமல் விட்டதால், இந்த முடிவை, தமிழக பள்ளி கல்வித்துறை மேற்கொண்டது.
ஆனாலும், 2018ல் நடந்த பொது தேர்வில், பிளஸ் 1 மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது. சில பாடங்களில் தோல்வியுற்ற, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பை தொடராமல், &'டிப்ளமா&' படிப்புக்கு மாறினர்.இந்த ஆண்டு, அதுபோன்ற நிலை வந்து விடாமல், மாணவர்கள் தொடர்ந்து, பிளஸ் 2 வரை படிக்கும் வகையிலும், பிளஸ் 1 பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்கள் மீது, தனி கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், &'பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், அவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி, அதிக மதிப்பெண் பெற, தயார்படுத்த வேண்டும்&' என, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.&'அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, வினாத்தாள் வடிவமைப்பை, மாணவர்களுக்கு புரிய வைத்து, அதன் அடிப்படையில், கேள்விகளை தயாரிக்க வேண்டும்&' என, பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment