தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 14ம்தேதி தொடங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது. 14ம்தேதி தமிழ் முதல் தாள், 18ம்தேதி தமிழ் இரண்டாம் தாள், 20ம்தேதி ஆங்கிலம் முதல் தாள், 22ம்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 25ம்தேதி கணிதம், 27ம்தேதி அறிவியல், 29ம்தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கிறது.
இந்த ஆண்டு முதன்முறையாக, மொழிப்பாடத் தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடக்கிறது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரை நடக்கிறது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டினை, தேர்வுத்துறை இயக்குநரக இணையதளத்தில் வரும் 25ம்தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிவியல் பாடத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், அதற்கான பயற்சி பெற்ற பள்ளிகளில் நேரில் சென்று செய்முறை தேர்வு குறித்த விபரங்களை தேர்வு கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment