அங்கன்வாடி உதவியாளர் பணி விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அங்கன்வாடி உதவியாளர் பணி விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மைய பணியாளர்கள், உதவியாளர்கள் காலிப்பணியிடங் களில் பணிபுரிய தகுதியானவர்கள் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம். இது குறித்து கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: 




பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட த்தின் கீழ் காலிப்பணியிடமாக உள்ள 12முதன்மை அங்கன் வாடி மையப் பணியா ளர்கள் மற்றும் 33 அங்கன்வாடி மைய உதவியாளர்கள் காலிப் பணியிட ங்களுக்கு விண்ணப்பம் செய்ய, விண்ணப்பபடிவங்களின் மாதிரிகள் அந் தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் வைக் கப்பட்டுள்ளன. அதன்படி, அங்கன்வாடிமையப் பணியாளர்களுக்கான தகுதி 2019 ஜனவரி 1ம் தேதியன்று 25வயது முடிந்த 35வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் (ம) மலைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகபட்ச 40வயதாகவும், மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச 20வயதாகவும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சிஎன தளர்வுசெய்யப்பட்டுள்ளது. இதர இனங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 




 மேலும் அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கு தகுதியாக 2019 ஜனவரி 1ம்தேதியன்று 20வயது முடிவுற்ற 40வயது மிகாதவர்கள், கணவனை இழந்த வர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மலைப்பகுதியில் வசிப் பவர்களுக்கு 45வயதுவரை வயதுவரம்பு நீடித்து வழங்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு சிறப்புநிலை ஊதியமாக ரூ7,700ம், அங்கன் வாடி உதவியாளர்களுக்கு சிறப்புநிலை ஊதியமாக ரூ4,100-ம், ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இந்த மாதிரி விண்ணப்பப் படிவங்களைப் பார்த்து தங்கள் விண்ணப்பங்களை தயாரித்து விளம்பரம் பெறப்பட்ட நாளிலி ருந்து மனுவிண்ணப்பிக்க கடைசிநாளான 15ம்தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மனு விண்ணப்பிக் கும்போது விண்ணப்பதாரர் வசிப்பிடஆதாரமாக வாக்காளர் அடையாளஅட்டை, வீட்டுவரி ரசீது, குடும்பஅட்டை, ஆதார் அடையாள அட்டை இவற்றில் ஏதேனுமொரு சான்று இணைக்கப்பட வேண்டும். 






இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தரைதளம், மாவட்டக் கலெக்டர் அலுவலகம் என்றமுகவரியில் நேரில்அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment