ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து பாடங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 5 பேர், திருப்பூர் மாவட்டத்தில் 14 பேர் என மொத்தம் 19 பேர் தற்காலிக ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் காலிப்பணியிடம் தற்காலிக ஆசிரியர்களின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில்,
'கோவை மாவட்டத்தில் குறைந்த அளவிலான காலிப்பணியிடம் தான் இருந்தது. இந்த இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார். 🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment