பிளாஸ்டிக் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட முன்வடிவு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில்அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதற்கான சட்ட முன்வடிவு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், சிறு வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், மளிகை கடை, மருந்து கடைகள் போன்றவைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைசேமித்தல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு முதல் முறை ரூ. 25 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ. 50 ஆயிரமும், மூன்றாவது முறை ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும், 3 முறை அபராதம் விதித்த பிறகும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment