உடுமலை:பிளஸ் 1 மாணவர்களுக்கு, பாடப்பகுதியை எளிமையாக்கும், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் 'ஸ்கோப்', திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும், பல்வேறு திட்டங்களை கல்வித்துறை கல்வியாண்டு தோறும் செயல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டிலும், உயர்நிலை மாணவர்களுக்கு 'இம்பார்ட்' திட்டமும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 'ஸ்கோப்', என்ற திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளது.உயர்நிலைப் பள்ளிகளுக்கான திட்டத்தில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட அளவில் போட்டிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து, தற்போது பிளஸ் 1 மாணவர்களுக்கு, 'ஸ்கோப்', திட்டத்தைகல்வித்துறை செயல்படுத்தியுள்ளது.இத்திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திலும் ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பது, கற்றல் மற்றும் கற்பித்தல் எளிமையாக்குதல் குறித்து, மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.640 பள்ளிகள் தேர்வுஇதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 பள்ளிகள் வீதம், மாநில அளவில், 640 பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், பொருளியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும்,ஐந்து மாணவர்கள் வீதம், ஒரு பள்ளியில் 35 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளை தேர்ந்தெடுத்து, அது தொடர்பான ஆய்வுக்கட்டுரையை, மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவில்,முதல் மூன்று இடம் பெறும் பள்ளிகளின் ஆய்வுக்கட்டுரை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுகின்றன.உடுமலை, கல்வி மாவட்டத்தில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இத்திட்டத்தில்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பள்ளியில், உயிரியல் துறை மாணவியர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி,ரத்த பரிசோதனை நிலையத்துக்கு சென்று ரத்தசர்க்கரை தொடர்பான தகவல்கள் பெற்று ஆய்வுக்கட்டுரைக்கான களப்பணி மேற்கொண்டனர்.பிப்., 22 வரை அவகாசம்உடுமலை கல்வி மாவட்டத்தில் எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியும் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவில், இந்த ஆய்வுக்கட்டுரைகளை, சமர்ப்பிக்க, பிப்., 22ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பாரதியார் நுாற்றாண்டு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார், திட்ட செயல்பாடுகளைஒருங்கிணைக்கின்றார்.
No comments:
Post a Comment
Please Comment