பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வினை மொத்தம் 8.87 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.
வரும் 19-ஆம் தேதி வரை இந்தப் பொதுத்தேர்வு நடைபெறும்.
இதனை மொத்தம் 7, 082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ, மாணவிகள், பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்) 25,741 தனித்தேர்வர்கள், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள்) 1,144 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதவுள்ளனர்.
இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள்; 4 லட்சத்து ஆயிரத்து 101 பேர் மாணவிகள் ஆவர். மேலும் இரு திருநங்கைகளும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ளனர்.
150 புதிய தேர்வு மையங்கள்:
சென்னை மாநகரில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 49 ஆயிரத்து 419 மாணவ, மாணவிகள் 158 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15,408 பேர் தேர்வெழுதவுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 2,944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 150 புதிய தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
🔰சிறைவாசிகளுக்காக...
நிகழாண்டு வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment