கஜா புயலினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட மக்கள் தங்கள் தொழில்களை இழந்துள்ளதால், தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அரசு பள்ளியில் ஆச்சர்யம்..! "தண்ணீர் பெல்" திட்டத்திற்கு குவியுது பாராட்டு..! அசத்தல் நிகழ்வின் பின் அற்புதம்..!
அரசு பள்ளியில் ஆச்சர்யம்..! "தண்ணீர் பெல்" திட்டத்திற்கு குவியுது பாராட்டு..! அசத்தல் நிகழ்வின் பின் அற்புதம்..!
விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நலத்திட்டத்திற்குரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும்இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக இந்தத்தொகை செலுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்குவது குறித்த அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியைதொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த, ஒவ்வொரு மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சென்னை மாநகர ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு, முன்னதாக தமிழகத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி,வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த நிதியுதவியை அளிக்கும்.
ஊரக மற்றும் நகர்ப்புறம், வட்டாரம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக பயனாளிகளை கணக்கெடுத்தல், புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், மக்கள் நிலை ஆய்வு (பிஐபி) கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டு, அந்தபுள்ளி விபரங்களின் படி, சம்மந்தப்பட்ட நபர்களிடம் நேரடியாக வங்கிக்கணக்கு விபரங்கள் பெறப்பட்டு, வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.
முன்னதாக, பயனாளரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகுஇ-மதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதே நேரத்தில் இந்த விபரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இணைந்துசென்னை மாநகராட்சிஆணையர் மற்றும் மண்டல துணை ஆணையர்களுக்கும் அனுப்ப வேண்டும்.
இவை சரிபார்க்கப்பட்ட பிறகு நேரடியாக பயனாளரின் வங்கிக்கணக்கில் ரூ.2,000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment