ஆசிரியர்களே! மாற்றங்களுக்கான அடித்தளம்: "குரு 2019விருது" வழங்கும் விழாவில்எழுத்தாளர் சிகரம் சதிஷ்குமார் பேச்சு... - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர்களே! மாற்றங்களுக்கான அடித்தளம்: "குரு 2019விருது" வழங்கும் விழாவில்எழுத்தாளர் சிகரம் சதிஷ்குமார் பேச்சு...

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*


தமிழகம் முழுவதிலும் இருந்து பணியாற்றக்கூடிய ஆசிரியர்களில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களில் 100 நபர்களைத் தேர்வு செய்து அவர்களை விருது வழங்கிப் பெருமைப்படுத்த பாடசாலை வலைத்தளமும், சென்னை CE அகாடமி நிறுவனமும் இணைந்து முடிவு செய்து குரு-2019 என்னும் விழாவை திருச்சியில் மிகச்சிறந்த முறையில் நடத்திச் சிறப்பித்தனர்.



அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எழுத்தாளரும், கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சிகரம் சதிஷ்குமார் கலந்துகொண்டு பேசியபொழுது, நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டில் உள்ள வகுப்பறைகளைச் சார்ந்தே உள்ளது. வகுப்பறைகளில் என்ன விதைக்கப்படுகின்றதோ, அதுவே நாளைய சமூகத்தில் வளர்ந்து நிற்கின்றது. எனவே ஆசிரியர்களின் பணி என்பது வெறுமனே அறிவை வளர்ப்பவர்களாக மட்டுமல்லாமல், அதனுடன் சமூக அக்கறையையும் சேர்த்து வளர்ப்பவர்களாகத் திகழ வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியர்களே! இந்த சமூகத்தை நேசிப்பவர்களாகின்றனர். 



எனவே ஒரு தேசம் வளர வேண்டுமெனில் , மாணவர்களை ஆசிரியர்கள் கொண்டாடுவதும், ஆசிரியர்களை இந்த சமூகம் கொண்டாடுவதும் அவசியம் எனக் குறிப்பிட்டதோடு, ஆசிரியர்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாத வேர்களாகவே இருக்கின்றனர்.அந்த வேர்கள்தான் மரத்திற்கு  வெளியியே மலர்களாகவும், கனிகளாகவும் மாணவர்கள் பளிச்சிடும்பொழுதுதான் வெளிச்சம் கிடைக்கின்றது. மாற்றங்களை வரவேற்பவர்களாக மட்டுமல்லாமல் , அதை முன்னெடுப்பவர்களாகவும் ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்று பேசினார்.




இந்நிகழ்வில் அனைத்துப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்விற்கு பாடசாலை நிறுவனர் குப்புசாமி தலைமை வகித்தார்.மேலும் முன்னாள் டி.ஜி.பி. கணபதி, மருத்துவர் இளங்கோ, CEஅகாடமியின் இயக்குநர் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பாடசாலை மதன் முன்னெடுக்க, தலைமை ஆசிரியர் ரவிக்குமார் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Please Comment