இணைய பாதுகாப்பு தினம் : தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க 2 நிமிட கூகுள் பாதுகாப்பு சோதனை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இணைய பாதுகாப்பு தினம் : தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க 2 நிமிட கூகுள் பாதுகாப்பு சோதனை

பிப்ரவரி 5ந் தேதி இணைய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதனை முன்னிட்டு, கூகுள் இந்தியா நிறுவனம் 2 நிமிடத்தில் தரவுகளை பாதுகாக்கும் வழிமுறையை வழங்கியுள்ளது. இதற்காக தனது முகப்பில் பாதுகாப்பு சோதனை குறித்தான விளக்குமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 




 தமிழ் உட்பட மொத்தம் 7 மொழிகளில் கூகுள் இந்தியா நிறுவனம் #SecurityCheckKiya என்ற புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக இணையத்தில் உங்கள் தரவுகளை பாதுகாக்க கூகுள் நிறுவனம் வழி வகுக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் தானியங்கி முறையில் ஸ்பேம் பாட்கள், போலியான தகவல்களை கண்டறிந்து பயனாளர்களை எச்சிரிக்கையாக இருக்க உதவுதாக கூகுள் இந்தியா நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவு தலைவர் சுனிதா மோகந்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்றைக்கு இணைய பாதுகாப்பு தினம் என்பதனால் கூகுள் இந்தியா நிறுவனம், 




தமிழ் உட்பட ஹிந்தி, கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என மொத்தமாக 7 இந்திய மொழிகளில் இந்த சேவையை வழங்க தொடங்கியுள்ளது. உங்கள் தரவுகள் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதனை அறிய கூகுள் முகப்பு பக்கம் google.co.in முகவரிக்கு செல்லுங்கள்.. அதன் கீழ் உள்ள 2 நிமிட சோதனையை இயக்கவும் இயக்கினால் கீழே வழங்கப்பட்டுள்ள இரு ஸ்கீரின்ஷாட் உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு படத்தில் உள்ளதை போன்ற அமைப்பு தோன்றவில்லை என்றால் நேரடியாக g.co/securitycheckup இந்த முகவரியை இயக்கலாம். 



நம் இல்லங்களை பாதுகாப்பை மேற்கொள்வதை விட மிக கவனமாக இணையத்தில் பாதுகாப்பினை மேற்கொள்வது இன்றைய இணைய வாழ்கையில் மிக முக்கியமானதாகும்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment