இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?

believe in america என்ற பிரபல சினிமா டயலாக் போல், அமெரிக்காவுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் பெரிய பெரிய கனவுகளுடனே சிலிக்கான் வேலிக்கு செல்கின்றனர். 




இந்தக் கனவு பயணத்தில் வெற்றிபெற பல ஆயிரம் பேர் தங்கியிருக்கும் ஊர் தான் கலிப்போர்னியாவின் ஆதர்டன். இந்த ஊரில் தங்கியிருக்கும் மக்களின் சராசரி வருமான 4,50,696 டாலர், இது 2017ஆம் ஆண்டின் தகவல், இது 2016ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 7,293 டாலர் அதிகரித்துள்ளது. சரி அப்படி ஊரில் யாரெல்லாம் இருக்கிறார்கள். கூகிள் நிறுவனத்தின் எரிக் ஸிகிமிட், பேஸ்புக் ஷெரில் சான்ட்பெர்க் உட்படப் பல பில்லியனர்கள் இந்த ஊரில் தான் வசிக்கின்றனர். மேலும் இந்த ஊரில் இருந்து வெறும் 10 மையில் தூரத்தில் தான் பேஸ்புக், கூகிள் ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவலகம் உள்ளது. 




இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் பல ஆயிரம் ஊழியர்களின் ஆஸ்தான நகரம் ஆதர்டன். மேலும் இந்த ஊரில் இருந்து 2 மையில் தூரத்தில் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் உள்ளது. இதைத் தொடர்ந்து நியூயார்க் நகரத்தின் ஸ்கார்டேல் 30000 டாலர் என்ற சராசரி வருமானத்துடன் 2வது இடத்திலும், 3வது இடத்தில் கொலராடோ-வின் செரி ஹில்ஸ் வில்லேஜ் உள்ளது.




🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸

No comments:

Post a Comment

Please Comment