நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்காது, எனவே தேர்வு குறித்து மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி,தமிழக பள்ளிக்கல்வித்துறை நேற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு (2018-2019) முதல்5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் இந்தத்தேர்வு, 60 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே,நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்காது, எனவே தேர்வு குறித்து மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்றும் முதல்வர் இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
Please Comment