5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் - மாண்பு மிகு அமைச்சர் செங்கோட்டையன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் - மாண்பு மிகு அமைச்சர் செங்கோட்டையன்


மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 






ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப் பாளையத்தில் உள்ள அலங்கார வளைவு விபத்து ஒன்றினால் சேதமானது. 

இதனை தொடர்ந்து சீரமைக்கப்பட்ட அந்த அலங்கார வளைவில் பெருந்தலைவர் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும் என்று நாடார் மகாஜன சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரி வந்தன.



இதனை ஏற்று அந்த வளைவில் காமராஜர் பெயர் பொறித்தகல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதை நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜை நேரில் அழைத்துச் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் காண்பித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையனிடம், 5 மற்றும் 8வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அமைச்சரவை கூடி இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.



பயோமெட்ரிக் முறையிலான மாணவர்கள் வருகைப் பதிவேட்டு முறை அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 

மார்ச் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment