கோவையில், 55 சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகள், உரிமத்துடன் இயங்குவதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 110 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. புதிய கல்வி சீர்த்திருத்த நடைமுறைப்படி, இப்பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரம், மாவட்ட கல்வித்துறைக்கு வழங்கப்பட்டது. கோவை சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, ஒழுங்குப்படுத்தும் வகையில், கூட்டம் நடந்தது. பங்கேற்காத 55 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது, ''கோவையில்,55 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, உரிமம் பெற்று இயங்குவதற்கான, ஆவணங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. ''இரு வார கால அவகாசத்தில், பதில் அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத பள்ளிகளில் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, வட்டார வாரியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியல் சமர்ப்பிக்க, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment
Please Comment