* தமிழகத்தில் 14 பேர் வெற்றி பெற்று சாதனை
* ராமநாதபுரம் மாணவர் 4வது இடத்தை பிடித்தார்
சென்னை: ஐஎப்எஸ் தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் 89 பேரும், தமிழகத்தில் 14 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமரன் அகில இந்திய அளவில் 4வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில் யு.பி.எஸ்.சி. இந்திய வனப்பணி(ஐஎப்எஸ்) 110 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். இதில் 1174 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 74 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. இந்த மெயின் தேர்வுக்கான ரிசல்ட் கடந்த ஜனவரி 4ம் ேததி வெளியிடப்பட்டது. இதில் இந்திய முழுவதும் 223 பேரும், தமிழகம் முழுவதும் 27 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வுக்கான ரிசல்ட் நேற்று காலை வெளியிடப்பட்டது.
இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி இயக்குனர் வைஷ்ணவி கூறியதாவது:
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஐஎப்எஸ் பணிக்கான நேர்முகத் தேர்வு முடிவை இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் 89 பேர் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 14 பேர் தேர்ச்சி ெபற்றுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமரன் அகில இந்திய அளவில் 4வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த தேர்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் இந்திய வனப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற 89 பேரில் 34 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பல்வேறு மையங்களில் படித்த மாணவர்கள்.
இதில் அகில இந்திய அளவில் 3ம் இடத்தை ஜிவானி கார்த்திக் (சூரத்), 4ம் இடத்தை ஜெயக்குமரன் (ராமநாதபுரம்), 8ம் இடத்தை திருக்குறள், 9ம் இடத்தை ஆஞ்சல் வாஸ்தவா ஆகிய மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சிபெற்று அகில இந்திய அளவில் முதல் 10 தரவரிசைக்குள் வந்துள்ள மாணவர்கள். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக டேராடூனில் பயிற்சி வழங்கப்படும். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதை தொடர்ந்து பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு அவர்கள் பணியில் சேருவார்கள். இவ்வாறு வைஷ்ணவி கூறினர்.
No comments:
Post a Comment
Please Comment