2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்டது தான் அரசு சார்பற்ற ஒரு தொண்டு நிறுவனம் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்ட இந்த அமைப்பு,
சமூகத் தீமைகளை நீக்குவதற்கு கல்வி மிகச் சிறந்த ஆயுதம் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டு அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியைச் செய்து வருகிறது.
2010 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அரசு பள்ளிகளில் பயின்ற வசதியற்ற மற்றும் திறன்கொண்ட +2 படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான நிதி உதவி வழங்கி தரமான கல்வி அளித்து வருகிறது. பெற்றோர்களை இழந்து,
ஆதரவற்ற, வறுமை காரணமாக மேல்படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளை முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 2,500 ஏழை மாணவர்கள் இந்த அகரம் அறக்கட்டளையில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். மேலும் இந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பினை நிறைவு செய்யும் திறமையான ஏழை மாணவர்களை அகரம் அறக்கட்டளைக்கு அடையாளம் காட்டும்படி
பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா அன்பான கட்டளை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்காணும் அகரம் பவுண்டேஷன் அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிளஸ் 2 மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பு எண்கள்: 8056134333 / 9841891000
No comments:
Post a Comment
Please Comment