குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் ஹஸ்முக்பாய் சேத் மற்றும் அஜய் சங்வி. இவர்களின் மகன்- மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று 15-ஆம் தேதி திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த செய்தியை கேட்ட இக்குடும்பத்தினர் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர். இதன்படி திருமண வரவேற்பு உள்ளிட்ட அனைத்து சம்பிரதாயங்களையும் ரத்து செய்தனர்.
மேலும் சமையல், அலங்காரம் உள்ளிட்டவற்றுக்காக ரூ. 5 லட்சம் பேசப்பட்ட நிலையில் மணமக்கள் வீட்டார் மேலும் ரூ. 6 லட்சத்தை சேர்ந்து ரூ. 11 லட்சமாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன் வந்தனர். இதற்கு ஆதரவு அளித்த கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு இரண்டு குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்
No comments:
Post a Comment
Please Comment