தமிழாற்றுப்படை வரிசையில் ‘அவ்வையார்’
கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்
தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத் திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைப் பற்றி ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.
இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார்,
கம்பர், அப்பர், கபிலர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார். உ.வே.சா, கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கலைஞர், மறைமலையடிகள். புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான் என 21 ஆளுமை களை வைரமுத்து அரங்கேற்றியுள் ளார்.
இதைத் தொடர்ந்து 22-வது ஆளுமையாக அவ்வையாரைப் பற்றி நாளை மாலை 5.30 மணியளவில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தனது கட்டுரையை அரங்கேற்றுகிறார்.
இவ்விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் இரா.மோகன் தலைமையுரையும், வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்துவும் தொடக்கவுரையும் நிகழ்த்தவுள்ளனர். ‘தமிழாற்றுப்படை’ விழா ஏற்பாடுகளை வெற்றித் தமிழர் பேரவையைச் சேர்ந்தோர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
Please Comment